சூர்யா 45
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஷிவதா, யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் கருப்பசாமியை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் என தெரிய வருகிறது. சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளாராம்.
ஆலப்புழா ஜிம்கானா
நேற்று மலையாளத்தில் “ஆலப்புழா ஜிம்கானா” என்ற ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் வெளியாகியிருந்தது. “பிரேமலு” படத்தில் நடித்த Naslen இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவர் அனகா ரவி. “ஆலப்புழா ஜிம்கானா” திரைப்படத்தில் அனகா ரவி இடம்பெற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் “சூர்யா 45” திரைப்படத்தில் அனகா ரவி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.