பக்தி பழமாக மாறிய ஆண்ட்ரியா.. வைரல் புகைப்படங்கள்..!

Author: Rajesh
14 May 2022, 12:23 pm

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனிடையே சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி எடுத்து கொண்டார்.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை விட்டு பதற விட்டார். மேலும், பிட்னஸில் அதிக அக்கறை கொண்ட ஆண்ட்ரியா, ஜிம் வொர்க்கவுட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில், பக்தி பழமாக மாறி இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!