காதலருடன் போட்டோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா : வைரலாகும் காதலர் தின Photo!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 12:41 pm

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார்.  பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார். 

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு  இவர் தான் டப்பிங் பேசினார். இவர் கவர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டினார். 

ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார். என்ன தான் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தாலும்  ஆண்ட்ரியாவின் கவற்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய ஆண்ட்ரியா, தனது செல்லப்பிராணியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் உங்கள் காதலரா என கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!