ஓ இதுதான் விஷயமா.. உடல் எடையை குறைத்து சிக்குனு ஸ்லிம் பியூட்டியாக மாறிய அஞ்சலி..!

Author: Vignesh
12 July 2024, 1:35 pm

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

anjali-updatenews360

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் வெப் சீரிஸ்லும், நடித்தார். தற்போது, அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், பல படங்களை கையில் வைத்திருக்கும் நடிகை அஞ்சலி தற்போது ஈகை என்ற படத்தில் நடித்து வருகிறார். அது அவருக்கு ஐம்பதாவது படம் அசோக் வேலாயுதம் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில், ஒரு காட்சிக்காக அஞ்சலி பதினாறு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து இருக்கிறாராம். டூப் வேண்டாம் என சொல்லி அவரே நடித்து கொடுத்து இருக்கிறார். மேலும், இடையில் படு குண்டாக இருந்த நடிகை அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து ஆளே சூப்பராகிவிட்டார். அண்மையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?