கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணும் அஞ்சலி.. விரைவில் தயாரிப்பாளருடன் 2-ம் திருமணமாம்..!

Author: Vignesh
22 March 2024, 1:40 pm

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.

anjali-updatenews360

ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.

anjali jai - updatenews360

இந்த நிலையில், பல கிசுகிசுவில் சிக்கினாலும் அஞ்சலி இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். தற்போது, ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தெலுங்கு சினிமா பக்கம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அஞ்சலி தரப்பில் இருந்து அந்த தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ உறுதியான அறிவிப்பு வரவில்லை என்பதால், உண்மை என்ன என்பது பிறகு தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

anjali - updatenews360

முன்னதாக, அஞ்சலியின் காதல் தோல்வியான பிறகு பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து தற்போது, அவருடைய வாழ்க்கையில் சில முக்கியமான ஐந்து முடிவுகளை எடுத்து இருப்பதாகவும், அதாவது கண் கெட்ட பிறகு சிலர் சூரிய நமஸ்காரம் பண்ணுவார்கள். அப்படித்தான் அஞ்சலி காதல் தோல்வியடைந்தால் அதன் மூலம் நிறைய பக்குவங்களை அடைந்து பல நல்ல விஷயங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?