பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார் .
அண்மையில் அவரின் நடிப்பில் டக்கர் படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது சித்தார்த் நடிப்பில் சித்தா படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த அஞ்சலி நாயர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பு தான் கண்சிவ் ஆகிவிட்டதாகவும், இதை தான் சித்தார்த்திடம் முன் இயக்குனரிடமும் கூறிய நிலை சித்தார்த் தனக்கு வாழ்த்து சொல்லி நீங்கதான் நடிக்கணும் நல்லா பண்ணுவீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு என்று நம்பிக்கை கொடுத்தார்.
நான் ஏழாம் மாதம் வரை படத்தில் நடித்து கொடுத்தேன். சித்தாசார் மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. அதேபோல், கேரளாவில் நிறைய போக்சோ பதிவாகி இருக்கிறது. எங்களை பொறுத்தவரை பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் நிற்க்க வைத்து தண்டனை கொடுக்கணும். அப்போதுதான், இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது என்று ஒவ்வொரு ஆண்களுக்கும் பயம் வரும் குற்றங்களும் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.