அந்த மாதிரி பையனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்.. அடம்பிடிக்கும் அஞ்சலி..!
Author: Vignesh10 June 2023, 11:15 am
நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.
எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில், தற்போது வெப்சீரிஸ் நடித்து வரும் அஞ்சலி, அதில் ஒரு காட்சிக்காக பிகினியில் தோன்றி உள்ளார். மேலும் இவர் தெலுங்கு படம் ஒன்றில் Item Song ஆட, அதன் Video தற்போது வெளியாகி பட்டையை கிளப்பியது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலி, “என்னை பொருத்தவரை நல்ல பையன் என்பவர் திருமணமான பிறகும் மரியாதை கொடுக்க வேண்டும். இதையடுத்து தான் அன்பு, காதல் எல்லாம். இது போன்று இருக்கும் பையனை தான் எனக்கு பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.