பிரமாண்டமான புதிய வீடு…கார்… சொகுசு வாழ்க்கை – கவினுடன் நடித்து செட்டில் ஆன அபர்ணா தாஸ்!
Author: Shree5 June 2023, 8:56 pm
அழகிய இளம் நடிகையாக தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் தான் தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். அதன் பின்னர் கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படைத்தது.
தொடர்ந்து தமிழ் ,மலையாளம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அவர் தற்ப்போது தனது கனவு வீட்டை கட்டி குடிபெயர்ந்துள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.