நான் நடித்த பிட்டு படத்தை பற்றி என் மகன் கேட்ட கேள்வி: சிம்பு பட நடிகை வேதனை..!
Author: Vignesh9 December 2023, 3:11 pm
நடிகை அர்ச்சனா தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.
சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், 15 படங்களுக்கு மேல் நடித்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
மணமகன் தேவை என்ற படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார். அதில் அவர் மணமகன் தேவை என்ற படத்தின் கதையை தன்னுடைய கதாபாத்திரத்தை விளக்கிச் சொல்லும் பொழுது ஒரு மாதிரி சொன்னார்கள். ஆனால், திரைப்படம் எடுக்கும் போது வேறு மாதிரியாக எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் போஸ்டரை என் மகன் பார்த்துவிட்டு அம்மா இது நீ தானா என்று என்னிடம் கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்போதே, இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், அதற்கு நீங்கள் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தினால் நீங்களே அவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுத்தது போல் ஆகிவிடும். இதனை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று தெரிவித்தனர். தற்போதும், அந்த படத்தில் நடித்தது நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன் என்று அர்ச்சனா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.