மாடலிங்கில் அட்ஜஸ்ட்மென்ட் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.. சீரியல் நடிகை அஸ்வதி ஓபன் டாக்..!

Author: Vignesh
7 September 2023, 11:45 am

விஜய் டிவி சீரியல்களுக்கு இல்லத்தரசிகளிடையே, எப்போதும் மவுசு ஜாஸ்தி தான். இதனிடையே, பிரபல சீரியல்களில் ஒன்றான மோதலும் காதலும் தற்போது இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் நடிகை அஸ்வதி முக்கியமான ரோலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

aswathy - updatenews360

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வதி சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மென்ட் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், இந்த துறை மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை இருந்துதான் வருகிறது.

aswathy - updatenews360

அதிலும், சினிமாவை காட்டிலும் மாடலிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி சில மாடலிங் ஏஜென்ட்கள் இருக்கின்றனர் அவர்களிடம் தான் கவனமாக இருக்க வேண்டும். மேலும், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கும் அதில், ஆண் பெண் பாகுபாடு இல்லை என்று அஸ்வதி தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 471

    0

    0