நடிகை அசின் மகளா..? செம அழகு… போட்டோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!

Author: Rajesh
18 July 2022, 10:32 am

மலையாள திரையுலகில் இருந்து தமிழில் அடியெடுத்து வைத்து தங்களுக்கென தனி இடத்தை பிடித்த நடிகைகளில் நடிகை அசின் ஒருவர். 2004ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இப்படத்தில் கேரளத்து பெண்ணாகவே நடித்திருந்த அசின், முதல் படத்திலேயே தனது வசீகர அழகு, expression மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யா உடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில், குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்கள் ஜோடியாக நடித்தார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து ஹிந்தி திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார். இவ்வாறு, டாப் நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவர் 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2017ம் ஆண்டு, அரின் என்ற பெண் குழந்தை பிறந்தது.

தற்போது அசின் மகள் அரினுக்கு 4 வயது ஆகும் நிலையில், அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் அரின். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 7316

    879

    67