“இந்த வயசுல கூட மெழுகு சிலை மாதிரி இருக்கீங்க” – அசின் லேட்டஸ்ட் Photos !

Author: Rajesh
1 September 2022, 11:32 am

20 ஆண்டுகளுக்கு முன், தனது திரைபயணத்தை தொடங்கியவர் அசின். இவர் முதன் முதலில் மலையாளத்தில் நடித்தார், அதிலும் இவர் நடித்த கதாபாத்திரம் துணைக் கதாப்பாத்திரம் தான். பிறகு தெலுங்கில், ரவி தேஜாவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், உள்ளம் கேட்குமே என்கிற படத்தின் மூலம், தமிழிலும் நடிக்க தொடங்கினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் சற்று தாமதிக்க, அதற்குள் எம் குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி இவருக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிறகு சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அசின் நடித்த அத்தனை படங்களும் அவருக்கு ஹிட்.

அதன் பிறகு ஹிந்தியில் ஒரு ரவுண்ட் வந்தார். பிறகு 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட அசினின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” இப்போ கூட மெழுகு சிலை மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி