பீல்டு அவுட் ஆனால் என்ன? பீக்கில் இருந்தபோதே அள்ளியாச்சு – அசின் சொத்து இத்தனை கோடியா!

Author: Shree
26 October 2023, 12:08 pm

கேரளத்து பைங்கிளியான நடிகை அசின் நல்ல உயரம், அழகான தோற்றம் , ஸ்லிம் பிட் லுக் என அறிமுகம் ஆனதில் இருந்தே இருந்தே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் அழகால் வசீயம் செய்தவர். ஆரம்பத்தில் பரதநாட்டியக் கலைஞராக இருந்த அசின் 2001 ஆம் ஆண்டில் வெளியான ” நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்ததால் அசின் புகழ் பாராட்டப்பட்டு தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வந்தார். பின்னர் தெலுங்கில் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ” அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்று படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அசின் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.

அது தான் தமிழில் வெளிவந்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படம். தமிழிலும் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட்டிற்கு சென்று இந்த பக்கமே திரும்பி பார்க்கவி ல்லை. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.

அழகான குடும்பம் ஒரு மகள் என நிம்மதியாக வாழ்ந்து வரும் அசின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அசினின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 117 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அசினிடம் ஆடி க்யூ 7, பென்ஸ் ஆகிய சொகுசு கார்கள் உள்ளது. இது தவிர அவரது கணவரான தொழிலதிபர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பை சேர்த்தால். இன்னும் எத்தனை கோடி இருக்கும் என எல்லோரும் வாய் பிளந்துவிட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 375

    0

    0