மூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனை.. கை விரித்த டாக்டர்; வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை..!

Author: Vignesh
6 June 2024, 1:54 pm

பொதுவாக சினிமாவில் ஹீரோயின்கள் தான் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுவார்கள். அதுவும் பட வாய்ப்புகள் எதுவும் கையில் இல்லை என்றால், உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஹீரோயின்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி கவர்ச்சி காட்டியே புது பட வாய்ப்புகளை பெற்றவர்கள் பலர்.

Asritha

மேலும் படிக்க: 15 வயசுல வீட்டை விட்டு ஓடி வந்த பொண்ணு.. இப்போ லேடி சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கும் நடிகை; ஆனா.. அது நயன் இல்லப்பா..!

அந்த பார்முலாவை தற்போது, சீரியல் நடிகைகளும் கையில் எடுத்து இருக்கின்றார்கள். அந்த வகையில், விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அஸ்ரிதா இவர் சீரியலில் ஹோமிலியாக தான் நடித்து வந்தார். ஆனால், திடீரென எல்லை மீறி கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Asritha

இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில், தனக்கு ஏற்பட்ட விபத்தில் மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனதாகவும், அப்போது பழைய நினைவுகள் ஞாபகம் வந்தாலும், அதை அதிகமாக யோசிப்பதால் தலையில் அதிகப்படியான வலி ஏற்பட்டு அவதிப்பட்டதாகவும், அதற்காக தனியாக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

Asritha

மேலும் படிக்க: உச்ச நடிகரின் படத்தில் அட்ஜெஸ்ட் செய்த சுகன்யா.. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..!

மேலும், தன்னால் தானாக எழுந்து பாத்ரூம் கூட செல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும், எந்த சத்தத்தையும் கேட்க முடியாது. 10 சதவீதம் தான் உயிர் வாழ்வேன் என்று மருத்துவர்கள் அன்றே கை விரித்துவிட்டனர். வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது. எப்போதும், மன உறுதியை நான் கைவிடவில்லை. என் தந்தையின் ஆசிர்வாதம் மக்களின் அன்பும் தான் என்னை மீண்டும் நடிக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து, நடித்துக் கொண்டே இருப்பேன் என்று உருக்கத்துடன் நடிகை அஸ்ரிதா தெரிவித்துள்ளார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!