சும்மா கதைவிடுறியா?.. கேலியும் கிண்டலும் செய்த உறவினர்கள் குறித்து பேசிய அதுல்யா ரவி..!

Author: Vignesh
6 June 2024, 4:08 pm

அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” , முருங்கைக்காய் சிப்ஸ் என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.

Athulya Ravi -updatenews360

மேலும் படிக்க: இறந்து ஒரு வாரம் ஆகிடுச்சு.. உன் முகத்தைக் கூட பார்க்க முடியலையே.. தந்தையை இழந்து வாடும் ஷெரின்..!

படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில் பகிர்வார்.

இந்நிலையில், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதிலளித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். ஆம், வெர்ஜினிட்டியை இழக்க எது சரியான நேரம் என கேட்டதற்கு 21 முதல் 25 வரை அதற்கு சரியான வயது தான். மேலும் திருமணத்திற்கு பின்னர் உடலுறவு கொள்வது தான் சரி. அது தான் நம் கலாச்சாரம்.

Athulya Ravi -updatenews360

மேலும் படிக்க: Luxury கார் வாங்கி குடும்பத்துடன் கொண்டாடிய Sun TV சீரியல் நடிகை – என்ன விலை தெரியுமா?..

ஆனால், இப்போவெல்லாம் திருமணத்துக்கு ட்ரையல் பார்ப்பது போல் லிவிங் டூ லைஃப் வாழுறாங்க. அது அந்த இருவரை சம்மந்தப்பட்டது நம்ம இடையூறு செய்து பேசுவது தேவையில்லாதது. திருமணத்திற்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து புரிந்துக்கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமே தவிர அதை விமர்சிக்க மூன்றாவது நபருக்கு என்ன வேலை வேண்டிகெடக்கு? இருந்தாலும் நம் கலாச்சாரம் வேறு… திருமணத்திற்கு பின் உறவு வைத்துக்கொள்வது தான் முறையானது என அவர் தனது கருத்தினை கூறினார்.

Athulya Ravi -updatenews360

மேலும் பேசுகையில், முதல் படத்தில் நடித்த பிறகு என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு ரிலீஸ் தேதி தள்ளி போனது. ஒரு கட்டத்தில் நிஜமாவே நீ படத்தில் நடிக்கிறாயா அல்லது சும்மா கதைவிடுறியா? என்று உறவினர்கள் கிண்டல் செய்ய தொடங்கி விட்டன. அந்த விஷயம், எனக்கு மிகவும் பாதித்தது. என்னை அதிகப்படியாக காயப்படுத்தியது. கடைசியில், படம் வெளியாகி எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்த பிறகுதான் நிம்மதியாகவே இருந்தது என்று அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 251

    0

    0