கிச்சன்லயே வச்சு.. இரண்டு மூன்று நாட்களுக்கு அதை பண்ணுவார்.. கணவரின் சீக்ரெட்டை உடைத்த பாப்ரிகோஷ்..!(வீடியோ)

Author: Vignesh
6 March 2024, 5:45 pm

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை பாப்ரி கோஷ் பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் பைரவா சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சீரியலிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

Papri Ghosh- updatenews360

அதனை ஏற்றுக்கொண்டு நாயகி, பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருமுகமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் இவருடைய வாழ்க்கை முறையை பின் தொடர்வதற்காக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், பேசுகையில், தன்னுடைய கணவர் ப்ளம் கேக் செய்து முடித்த பிறகு அதில் போர்க் ஸ்பூனை வைத்து குத்தி குத்தி அதில் ரம்மை ஊற்றி ஊற வைப்பார் எனவும், 2 முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக இதனை செய்வார் என்றும், இதனால் ப்ளம் கேக் சுவை கூடும் என பாப்ரி கோஷ் தெரிவித்து இருக்கிறார். இவருடைய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!