கணவருடன் விவாகரத்து… தனிமையில் நகரும் வாழ்க்கை? மனம் திறந்த நடிகை பாவனா!

Author:
27 August 2024, 12:37 pm

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை பாவனா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். 2000 கால கட்டத்தில் ஆரம்ப பகுதியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பார்க்கப்பட்டு வந்த பாவனா மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதை அடுத்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுக்கள் பெற்று தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், ராமேஸ்வரம், கூடல் நகர், தீபாவளி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனிடையே மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் ஏனென்றால் கடந்த சில நாட்களாக பாவனா தன்னுடைய காதல் கணவரை வாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் பாவனா நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதே கிடையாது. என்னுடைய கணவரும் நானும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை நான் சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் கிடையாது.

அதனால்தான் என்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு நான் தனிமையில் வாழ்ந்து வருவதாக மக்கள் நினைக்கிறார்கள். இருந்துட்டு போகட்டும் நீங்கள் நினைப்பது தவறு என்று என்னால் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாது. நீங்கள் இப்படி வதந்தியை பரப்பி விட்டதால் என்னுடைய கணவருடன் அடிக்கடி போட்டோ எடுத்து போடுவதும் எனக்கு அவசியம் இல்லை என பாவனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!