ப்பா என்ன ஒரு லவ்.. நடிகை பாவனா வெளியிட்ட திருமண புகைப்படங்கள் வைரல்..!

Author: Vignesh
23 January 2024, 9:31 am

சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்ட அவருக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது.

bhavana-updatenews360

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? சினிமா துறையில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர்.

அதன் பின்னர் பல வருட இடைவெளிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் திலீப்பும் தற்போது தமன்னாவுடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திலீப் குறித்து பேசிய நடிகை பாவனா ” திலீப் பெற்ற அம்மாவையே மோசமாக பார்க்கும் விஷமி. அதனால் தான் அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என பாவனா வெறுப்பை காட்டி இருந்தார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் சில ஆண்டு வெளியே வராமல் இருந்த நடிகை பாவனா அதிலிருந்து மீண்டு தற்போது, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடந்த 2017 கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவர் உடன் நிச்சயம் செய்யப்பட்டு, 2018 ல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாக கூறி திருமண புகைப்படத்தை தற்போது பாவனா வெளியிட்டுள்ளார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…