விபச்சார வழக்கால் சீரழிந்த வாழ்க்கை.. கசப்பான அனுபவத்தை சொன்ன புவனேஸ்வரி..!
Author: Vignesh7 December 2023, 1:30 pm
நடிகைகள் பெரும்பாலும் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவார்கள். ஆனால் ஒருசில விருப்பப்பட்டே அதை செய்து தடுமாற்றத்தை சந்திப்பார்கள்.
அந்தவகையில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி மார்க்கெட்டையும் இழந்துவிடுகிறார்கள். இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறி காணமல் போய்விடுகிறார்கள்.
90ஸ் காலக்கட்டத்தில் மாடல் மற்றும் நடிகையாக இருந்து சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் புவனேஸ்வரி. இடையில் விலைமாதுவாக பாய்ஸ் படத்தில் நடித்ததோடு சொந்த வீட்டில் விபச்சாரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையை இழந்து வந்தார். தற்போது அதைபற்றி பகிர்ந்து மீண்டும் வாய்ப்பினை பெற ஆவலோடு காத்திருக்கிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை புவனேஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், தனக்கு நடிகை சரோஜா தேவி என்றால் மிகவும் பிடிக்கும் எனறும், சினிமாவில் அவரை போல தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைத்தாகவும், ஆனால் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த சமயத்தில் அரசியலிலும் கவனம் செலுத்த துவங்கிய சமயத்தில், சிலர் சதி செய்து தன்னை விபச்சார வழக்கில் சிக்க வைத்தனர். இந்த விஷயம் பொய்யான குற்றச்சாற்று என்று நிரூபித்து, இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனேன் என்று புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.