ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு இருக்கு.. கயல் சீரியல் சைத்ரா Open Talk..!

Author: Vignesh
8 February 2024, 5:39 pm

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Chaitra-Reddy-updatenews360

இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.

Chaitra-Reddy-updatenews360

முன்னதாக, சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூடிய சீக்கிரமே 50 மாடுகளை வாங்கி சொந்தப் பண்ணையை ஆரம்பிக்கப் போவதாக கூறி மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை யாரும் தொல்லை செய்வது கிடையாது. அப்பா, அம்மா, கணவர் யாரும் சரி என்னை என்னுடைய சௌகரியத்தை புரிந்து கொண்டு அவர்களின் வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். அதனால், சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையும் சரியாக கவனம் செலுத்தி வருகிறேன்.

chaitra reddy

பொதுவாக ரசிகர்கள் எல்லோரும் கேட்பார்கள் குழந்தை எப்போது பெத்துக்க போறீங்க என்று தொகுப்பாளனி கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த சைத்ரா ரெட்டி ஏன்டா கல்யாணம் சீக்கிரமா பண்ணிட்டேன்னு வருத்தப்படுகிறேன். இதுல குழந்தை கொஞ்ச நாள் போகட்டும். படங்கள் எல்லாம் நல்ல பண்ணிட்டு செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். எப்போதும் என் வீட்டில் நீ இப்படித்தான் இருக்கணும் என்றும், ஆண்களுக்கு எப்போதும் போல் கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் எப்படி மாறாததே, அதேபோல் பெண்களும் மாறக்கூடாது என்பது என்னுடைய எண்ணம் என்றும், அதைத்தான் நான் செய்கிறேன். அதைத்தான் என் கணவரும் விரும்புகிறார் என்று சைத்ரா ரெட்டி ஓபன் ஆக பேசியுள்ளார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?