கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டியின் பாலியல் புகார்கள் தொடர்ந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ் சினிமாவிலும் அதன் தாக்கம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னதாக நடிகர் விஷால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசியபோது அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைக்கும் நபர்களை பெண்கள் தைரியமாக அந்த இடத்திலேயே அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அதை அடுத்த நடிகர் விஷாலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். நடிகைகள் பலரும் விஷாலின் இந்த பேச்சுக்கு விமர்சித்து வந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தற்போது பேச துவங்கி இருக்கிறார்கள்.
இதனால் இந்த விஷயம் தற்போது பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. பல நட்சத்திர நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் சிக்கி வருகிறார்கள். இந்த நிலையில் மலையாள சினிமாவில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ஷர்மிளா .
இவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். தமிழில் “காலம் மாறிப்போச்சு” என்ற படத்தின் மலையாள ரீமேக்கில் நான் படித்துக்கொண்டிருந்தேன். எப்பவுமே ஒரு படத்தில் கமிட் ஆன உடனே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் அந்த படத்தில் மட்டும் தான் படம் முடியும் தருவாயில் அந்த விஷயம் எனக்கு நடந்தது. அந்த படத்தில் இறுதி கட்ட ஷூட்டிங்… கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நான் கிளம்புவதற்காக இயக்குனரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். அப்போது தயாரிப்பாளர் இருக்கும் அறையில் சென்று சொல்லிவிட்டு கிளம்ப சொன்னார்கள்.
நான் அங்கு சென்று அவரிடம் சொன்னதும் அங்கே அந்த ரூமில் தயாரிப்பாளருடன் கிட்டத்தட்ட 8 பேர் குடித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்ற உடனே கதவை தாழிட்டுக் கொண்டு எனது அக்கா மீது பாய்ந்து அவரது புடவையை உறவினார்கள்.
என்னிடமும் ஒருவர் வந்தார். நான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்துவிட்டேன். எனது அசிஸ்டெண்ட்களில் ஒருவரான லட்சுமணன் அவர்களை அடித்துக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எம்.பி ஒருவரிடம் எனது உறவினர் வேலை செய்தார். அவருக்கு விஷயத்தை சொன்னவுடன் காவல் துறையினர் ஹோட்டலுக்கு வந்துவிட்டார்கள்” அதன் பின்னர் எப்படியோ அங்கிருந்து வந்தோம். அது மிகவும் மோசமான அனுபவம் என அவர் கூறினார்.
0
0