டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தன்னுடைய உடலழகை புடவையில் உடலைகாட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டார்.
