நாங்க தாசிப்பா.. எங்கள ஆட சொல்லி பாக்குற நீங்க யாரு.. கொந்தளித்த கார்த்தி பட நடிகை..!(வீடியோ)

Author: Vignesh
20 March 2024, 7:10 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அதிக அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமானார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், அதில் தீபாவும் ஒருவர்.

பார்க்க உடல் பருமனாக காணப்படும் இவர், குணத்தில் ஒரு குழந்தையாகவே இருப்பார் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சி தாண்டி சீரியல்களிலும், படங்களிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

deepa-updatenews360

அண்மையில், இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தீபா. இளம் வயதில், கணவரை இழந்த ஒரு பெண் யாருடனாவது போய்விட்டால், அவருக்கு ஒரு பட்டம் சூட்டி அவர்களுடைய வாழ்க்கையை முடித்து விடுவீர்கள். நீங்கள் நான்கு பேர் சேர்ந்து அவருக்கு மறுமணம் செய்து வையுங்கள். ஏன் அதை செய்யவில்லை. நாங்கள் பாட்டு பாடக்கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, சிரிக்க கூடாது. இதெல்லாம் உங்களுக்கு கௌரவ குறைச்சல், எங்களுக்குள்ளும் பல ஆசைகள் இருக்கும்.

deepa-updatenews360

இது உங்களுக்கு தெரியாதா நாங்கள் தாசிகள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த நிலைக்கு அப்படி மாற்றிய நீங்கள் யார், ஊரில் கரகாட்டக்காரியை ஆடச் சொல்லி ரசிக்கும் நீங்கள் யார், நாங்கள் தாசிகளே ஆனாலும் நடித்து எங்கள் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறோம். உங்களை போல் குடித்துவிட்டு ஊரையே அழிக்கவில்லை. யார் குடும்பத்தையும் கவனிக்கவில்லையோ, பெண்களை மோசமான நிலைக்கு தள்ளுகின்றானே, அவனைத்தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 302

    0

    0