6 வருடங்களுக்கு பின் கர்ப்பமான தீபிகா படுகோனே.. அப்பா ஆன குஷியில் ரன்வீர் சிங்..!

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமா நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனே, தமிழில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். டாப் நடிகைகளின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோனே தான். தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெட் கே படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்குரம், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என்று பாலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.

உடல் நிலைபாதிப்பு அண்மையில் தீபிகாவும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மும்பை பீச் கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பும் பிராஜெட் கே படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கின் பிரிவால் தொடர்ந்து தீபிகா, மனபோராட்டதை சந்தித்து வருவதால்தான் அவர் உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே, உமைர் சந்து என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து தீபிகாவும் ரன்வீரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டது தான் பாலிவிட்டின் சலசலப்புக்கு காரணம். நட்சத்திரங்கள் குறித்து இணையத்தில் பரவும் வதந்தி வழக்கமானது தான் என்றாலும், இந்த அளவுக்கு பூதாகரமாகி வரும் வதந்தி குறித்து தீபிகாவும், ரன்வீரும் அமைதியாக இருப்பது தான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனுக்கும் அவர் கணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மனைவி என்று கூட பாராமல் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும், ஷாக்கிங் தகவல் ஒன்றை பிரபல திரைப்பட விமர்சகர் ஆன உமைர் சந்து தனது தளத்தில் பதிவு செய்துள்ளார். நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில், பதிவு செய்து வரும் இவர் கூறியுள்ள இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறி வந்தநிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு குட் நியூஸ் செய்தியை தீபிகா படுகோனே அறிவித்துள்ளார். அதாவது நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக க்யூட்டான போட்டோ உடன் இந்த குட் நியூஸை அறிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

22 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

17 hours ago

This website uses cookies.