யாரு மேடம் அது? பார்த்திபன் சார் மாதிரியே இருக்காரு… சீதாவுக்கு முத்தம் கொடுத்த குரங்கு – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
Author: Shree8 June 2023, 7:52 pm
90ஸ் களில் பிரபல நடிகையாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இப்படி பிரபல நடிகையாக சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதோடு ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இதனிடையே பார்த்திபன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை Flirt செய்து வந்ததை பல பத்திரிகைகள் கிசுகிசுக்களாக செய்தி வெளியிட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் பிரியலாம் என முடிவெடுத்து 2001ம் ஆண்டு 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த சீதா சீரியல் நடிகர் சதீஷை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் சீதாவிற்கு சரியாக அமையவில்லை, விவாகரத்து பெற்றார்கள். இதனிடையே சமீப நாட்களாக சீதா சீரியல் , திரைப்படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விட்ட இடத்தை பிடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது குரங்குடன் முத்தமிட்டு கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்ஸ் பார்த்திபன் உடன் ஒப்பிட்டு பங்கமாக கலாய்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ: