வாவ்…தேவயானியின் மகள்களா இது? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே!
Author: Rajesh13 January 2024, 9:27 pm
1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தேவயானியின் மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதில் அவர்கள் அம்மாவை மிஞ்சும் அழகில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியப்புடன் தேவயானி வீட்டில் அடுத்து இரண்டு ஹீரோயின்கள் ரெடி என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.