கோடியில் புரளும் தேவயானியின் சொத்து இத்தனை கோடியா? பீல்டவுட் ஆனாலும் மார்க்கெட் குறையல!

Author: Rajesh
27 February 2024, 9:17 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகையான தேவயானி வெகு சீக்கிரத்தில் ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார். குறிப்பாக சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

devyani

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் தேவயானி அண்மை காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் கூட தனது இரண்டு மகள்கள் , கணவர் என குடும்பத்தோடு கலந்துக்கொண்ட நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தேவயானியின் வீட்டில் உள்ள விசித்திர வசதி குறித்த தகவல் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்த தேவயானி. அங்கேயே தனக்கு பிடித்தது போன்று பார்த்து பார்த்து அழகான வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் தேவயானியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 10 மில்லியன் டாலர்கள் இருக்குமாம். சென்னையில் பிரம்மாண்டமா வீடு, சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அந்தியூரில் 5 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?