ஒரே டார்ச்சர்.. Adjustment பண்ண சொல்லி கேக்குறாங்க.. அதிர்ச்சி கொடுத்த கண்ணே கலைமானே சீரியல் நடிகை..!
Author: Vignesh4 July 2023, 12:30 pm
சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
தற்போது கண்ணே கலைமானே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு எதார்த்தமாக இருப்பதாக ரசிகர்கள் இவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சமூகங்களை பற்றி பேசியுள்ளார். அதில், தேவி பிரியா கூறுகையில், பெங்களூரில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும் அதில் ஒருவர் தன்னிடம் ஆங்கிலத்தில் நன்றாக பேசிய நபர் பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு வர முடியுமா என்று கேட்டதாகவும், அதற்கு நிகழ்ச்சி நடக்கும் நாளன்று வருகிறேன் என்று தேவி பிரியா கூறியதாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்து தன்னிடம் இரவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என கூறியதாகவும், அதற்கு தேவி பிரியா அதெல்லாம் தன்னால் முடியாது என்று மறுத்து விட்டதாகவும், கடைசியில் அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் தன்னை அழைத்தார்கள் என்று புரிந்து கொண்டதால் தேவி பிரியா அந்த அழைப்பை துண்டித்து விட்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.