விவேக் கூட நடிச்சதுக்கு வடிவேலு அந்த மாதிரி பேசிட்டாரு… பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!
Author: Vignesh4 July 2023, 3:30 pm
தமிழ் சினிமா உலகில் காமெடி ஜாம்பவானாக ஜொலித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் வடிவேலு. இவருக்கென்று தனிக்குழுவை வைத்து பல படங்களில் அவர்களுடன் காமெடி காட்சிகளை அமைத்து வந்தார் வைகைப்புயல் வடிவேலு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார் வடிவேல். இவர் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். பல நடிகர் நடிகைகள் இவர் மீது புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வடிவேலு மார்க்கெட் சரிய அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் வடிவேலு செய்த பல செயல்களைப் பற்றி பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி வடிவேலுடன் நடித்த நடிகை தேவி ஸ்ரீ வடிவேலு தனக்கு செய்த பல்வேறு செயல்களை பகிர்ந்து உள்ளார்.
வடிவேலுவுடன் ஒரு படத்தில் தேவி ஸ்ரீ நடித்திருந்தார். இதையடுத்து, தனக்கு விவேக் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் நடித்த பிறகு தனக்கு வடிவேலு அவருடைய படங்கள் நடிக்க வாய்ப்பு தரவில்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டி வடிவேலுக்கு போனில் அழைப்பு விடுத்து வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் நான் யார் என்றே தெரியாது என தன்னிடமே வடிவேலு திமிராக பேசியதாகவும் ஸ்ரீதேவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.