அத காட்டினா தான் சான்ஸ்… தேவயானியின் சர்ச்சை பேச்சால் ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்!

Author: Shree
30 April 2023, 7:49 pm

சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் தேவயானி சினிமாவில் நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். அதாவது, ” தமிழ் சினிமாவை பொறுத்தவரை அப்போது விட தற்போது தான் அதிகமாக கவர்ச்சி உள்ளது. இந்த காலகட்டத்தில் கவர்ச்சி காட்டும் நடிகைகள் மட்டும் தான் பிரபலமாக முடியும்” என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த நிலைமை மாறனும் என கூறியுள்ளார். அடக்கமான குடும்பப்பெண் நடிகையான தேவயானியே இப்படி பேசியிருப்பது கோலிவுட் திரைத்துறையில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி