Adjustment – கொடுமை… அந்த இடமே புண் ஆகி போச்சு – புலம்பும் பிரபல நடிகை!

Author: Shree
16 September 2023, 11:14 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதனை சில நடிகைகள் வெளிப்படையாகவே கூறினாலும் அதற்கு ஒரு முடிவு கட்டவில்லை. அப்படி தான் நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை தாரணி. இவர் தற்போது சீரியல்களில் அக்கா, அண்ணி, வில்லி என வெளுத்து வாங்கி வருகிறார்.

இப்படியான நேரத்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நானும் சினிமாவில் இருக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன் என கூறியுள்ளார். ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் முடியாது என மறுத்ததால் அந்த ஷூட்டிங்கில் என் பின்புறத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய லைட் அடித்து எனக்கு தண்டனை கொடுத்தார்கள். அதனால் என் முதுகுகளில் புண் வந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!