அழகே பொறாமைபடும் பேரழகி .. நடிகை தர்ஷா குப்தாவின் Latest Cute Video..!

Author: Rajesh
27 March 2022, 2:15 pm

நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் நடிகை தர்ஷா குப்தா.அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .

தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா தற்போது, சேலையில் அழகான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அழகே பொறாமைபடும் பேரழகி என வர்ணித்து வருகின்றனர்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…