தேவயானி தமிழ் சினிமாத் திரையுலகின் முன்னணி நடிகை. கமல் அஜித் விஜய் என டாப் ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.தேவயானியின் இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ் தெலுங்கு மலையாளம் வங்காளம் மற்றும் ஹிந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.நிறைய நெடுந்தொடர்களிலும் விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார் தேவயானி. திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிக்காமல் சினிமாவில் இருந்து இருந்தார். இப்போது மீண்டும் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் தேவயானி.
சமீபத்தில் தேவயானியின் தம்பி நகுல் நடித்த வாஸ்கோடகாமா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.வாஸ்கோடகாமா திரைப்படம் இயக்குனர் ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.இசையமைப்பாளர் அருண் என் வி இசையமைத்துள்ளார்.
வாஸ்கோடகாமா திரைப்பட இசை வெளியீடு விழாவில் பேசிய தேவயானி தம்பி நகுல் பற்றி பெருமையாக பேசினார்.அவர் பேசும் போது நகுல் என் குட்டித் தம்பி.என் தம்பியை பற்றி எனக்கு எப்பவுமே பெருமை. இது ஒரு அபூர்வமான காம்பினேஷன் அக்கா ஒரு நடிகை தம்பி ஒரு நடிகர் இது மாதிரியான காம்பினேஷன் எங்கு அமையும்? என் அப்பா அம்மா தான் இதைக் குறித்து பெருமைப்படுவார்கள் என்று தம்பியை குறித்து பெருமை பொங்க பேசினார்.இதைக் கேட்ட நகுல் மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.