அழகுனா அழகு அப்படி ஒரு அழகு… திவ்யா பாரதியின் Cute reaction video ..!
Author: Rajesh9 March 2022, 2:35 pm
படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.
இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சொக்கும் அழகில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.