மெட்ராஸ் பட நடிகருடன் சர்பாட்டா பரம்பரை பட நடிகை காதல்..? வைரலாகும் பதிவு.. ரசிகர்கள் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
18 February 2023, 12:08 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் துஷாரா விஜயன். பா. ரஞ்சித் இயக்கி சர்பாட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மாடலிங் துறையில் இருந்த துஷாரா, கடந்த 2019ம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக பேசவில்லை. அதனை தொடர்ந்து இவர் பல குறும்படங்களில் நடித்திருந்தார்.

இந்த சூழலில் தான் சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அநீதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரி கிருஷ்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். அந்தப் பதிவில், இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய ஹரி” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனால் தான் ரசிகர்கள் பலரும் நடிகை துஷாரா விஜயன் நடிகர் ஹரி கிருஷ்ணனை காதலிக்கிறார்களா..? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!