‘ஷூட்டிங் ஸ்பாட்ல பாத்ரூம் கூட இல்ல’ .. ஆண்களா இருப்பாங்க..- வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி ஷங்கர்..!
Author: Vignesh27 March 2024, 1:59 pm
“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.
அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்ட காயத்ரி ஷங்கர், ஒரு ஷூட்டிற்கு போகும்போது அங்கே எல்லோரும் ஆண்களாக இருப்பாங்க, நான் மட்டும்தான் ஒரு பெண்ணாக இருப்பேன். ஒரு பாத்ரூம் அரேஞ்ச் பண்ணனும்னு அவங்களுக்கு தோன்றுவதற்கே நேரமாகும். ஒரே ஒரு பொண்ணு தான் என்பதால், அத பத்தி யோசிக்கவே மாட்டாங்க, சில நேரங்களில் ஒரு லொகேஷன் இருந்து வேற லொகேஷன் போகும்போது புரொடக்ஷன் காரையை நடுரோட்டில் நிறுத்தி டிரஸ் மாத்த சொல்லுவாங்க என்று தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.