ஆடிஷனில் அப்படி நடக்கும், பல அவமானம்.. பகீர் கிளப்பிய சீரியல் நடிகை..!
Author: Vignesh2 February 2024, 1:00 pm
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது, இந்த கதையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்தது. அடுத்து தொடரில், என்ன நடக்கப்போகிறது என்பதை காண இல்லத்தரசிகள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இந்த தொடரின் மூலம் பிரபலமான மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் கோமதி பிரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கோமதி பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் எனக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில், மாடலின் வாய்ப்பு கிடைத்த போது எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாடலிங் செய்து கொண்டே சினிமா வாய்ப்பை தேடிக்கொண்டே இருந்தேன்.
ஒரு சமயத்தில் இரண்டையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால், முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது, ஆடிஷன் செல்லும் போது என்னை பார்த்து இந்த பொண்ணு பார்க்க பாவமா இருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பாரா என்று எல்லோரும் யோசிப்பாங்க, பல இடங்களில் அவமானங்களை சந்தித்துள்ளேன். அதனால், சோர்ந்து விடக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று கோமதிப்பிரியா தெரிவித்துள்ளார்.