லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே கோபிகாவா இது? குழந்தை குட்டிகளுடன் எப்படி இருக்காங்க பாருங்க!
Author: Rajesh7 February 2024, 7:47 pm
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகையான கோபிகா லட்சணமான முக ஜாடையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக அழுதுக்கொண்டு மிகவும் எமோஷனலான காட்சிகளில் அவர் தத்ரூபமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
வீராப்பு எனும் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி பரத் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த எம் மகன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். தொடர்ந்து சிம்புவுடன் தொட்டி ஜெயா, ஸ்ரீகாந்த் உடன் கனா கண்டேன், 4 ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் கவனம் அறியப்பட்டார்.
அதன் பின்னர் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தபோதே 2008ம் ஆண்டு அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட நடிகை கோபிகாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படன் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவிவருகிறது .