“சின்ன குஷ்பு இல்ல, பெரிய குஷ்பு..” ஹன்சிகா லேட்டஸ்ட் Video !

Author: Rajesh
14 July 2022, 12:56 pm

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.
பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. மேலும் ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில், மஹா படத்தின் Promotion நிகழ்ச்சிக்கு வந்த போது Half Sleeveless Transparent Saree அணிந்து இருக்கும் வீடியோ சிலதை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “சின்ன குஷ்பு இல்ல, பெரிய குஷ்பு..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!