நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.
இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது.
அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
குண்டாக புஷ் புஷ் அழகாக இருந்த ஹன்சிகா திடீரென ஆள் அடையாளமே தெரியாமல் படு ஒல்லியாக மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது மேலும் மேலும் உடல் எடையை குறைக்க கம்பியில் உடலை வளைத்து நெளித்து ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இதுக்கு மேலயும் நீங்க ஒல்லியாகணுமா? என ரசிகர்கள் வெறுப்புடன் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.
முன்னதாக, 33 வயதாகும் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து சம்பாதித்து வருகிறார். அப்படி படங்கள், சொந்த தொழில் என சம்பாதித்து நடிகை ஹன்சிகா மோத்வானி ரூ. 45 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அட பாவமே இவ்வளவுதான் உங்க சொத்தா என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.