நள்ளிரவில் நடிகையின் வீட்டு கதவை தட்டிய காந்த் நடிகர்.. மறக்கமுடியாத இரவு குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
29 August 2023, 3:45 pm

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

rajini jailer

நடிகை ஹீமா சௌத்ரி 70, 80 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். 1976 -ம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனால், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலராக இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஹீமா சௌத்ரி, பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

hema chaudhary - updatenews360

அதில் அவர், “திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஆக்ட்டிங் ஸ்கூல் சென்றதாகவும், அப்போது அதில் ரஜினிகாந்தும் மாணவராக இருந்ததாகவும், சில நாட்கள் கழித்து இருவரும் நண்பர்களாக மாறியதாக தெரிவித்தார்.

தனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அங்கு இருந்து தான் சென்றுவிட்டதாகவும், ஆனால் ரஜினிகாந்திற்கு அப்போது எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

rajini - updatenews360

ரஜினி இதனால் அதிக நேரம் தனிமையில் தான் இருப்பார் என்றும், ஒரு நாள் அவருக்கு கே பாலச்சந்தர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை சொல்ல நள்ளிரவில் தன் வீட்டிற்கு வந்த ரஜினி தன் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி சென்றதாகவும், இப்பொது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக தான் நடந்து கொள்கிறார்” என பேட்டியில் தெரிவித்திருந்தார்.

hema chaudhary - updatenews360
  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!