முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு மற்றும் கந்தர்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இவர் நடித்த படங்கள் பெரியளவில் சக்ஸஸ் ஆகா விட்டாலும்,
தெலுங்கில் வீரசிம்ம ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து, தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி உள்ளார்.
‘வீரசிம்ம ரெட்டி’ வெற்றி விழாவில் பாலையாவுடன் ஹனிரோஸ் கையுடன் கைகோர்த்து மது அருந்தும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
ஏற்கனவே இவரது ஸ்டிரக்ஷர்க்கு என தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு. இப்படியிருக்கையில், கேரளாவின் மன்னார்காட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை திறந்து வைப்பதற்காக ஹனிரோஸ் வந்திருந்தார். அவரது வருகையை அறிந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
கடையை திறந்துவிட்டு ஹனிரோஸ் காரில் திரும்ப புறப்பட்டார். அப்போது, அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை எவ்வளவு போராடியும் பவுன்சர்கள் மற்றும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிலர் அவர் மீது விழுந்தனர். இருந்தும் அவர் பவுன்சர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றார்.
அந்த வீடியோவை ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அருகில் நிற்பதையே சிலர் கோபமாக பார்க்கும் இந்த காலகட்டத்தில், அவரை தள்ளிவிட்ட ரசிகர்களை பார்த்து சிரித்து விட்டு, சென்ற ஹனிரோஸ்-க்கு இன்னும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.