முதல்ல பேபி பம் இப்போ காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இலியானா… இவர் தான் காதலரா?..

Author: Vignesh
3 June 2023, 1:45 pm

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து “விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என தெரிவித்திருந்தார்.அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லினர்.

இந்நிலையில் கர்ப்பமான வயிறு நன்றாக தெரியும்படி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இருந்தாலும் இந்த குழந்தைக்கு யார் அப்பா என்பதை அவர் இதுவரை தெரிவிக்கவே இல்லை.

இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். வேறு சிலர், உங்களுக்கு திருமணம் ஆகியுள்ளதா? என்றும் குழந்தைக்கு தந்தை யாரென்றும் கேட்டு உள்ளனர். இதுவரை திருமணம் ஆனது பற்றி எந்த தகவலையும் இலியானா வெளியிடாத நிலையில், தனது காதலர் பெயரையும் அவர் வெளியிடவில்லை.

ஆரம்பம் முதலே தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமுறை கூட வெளியிடாத இலியானா. இதையடுத்து, நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். ஒருவேளை அவரா இருக்குமோ..? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில், இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் அண்ணன் Sebastien Laurent Miche தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ileana d'cruz -updatenews360

இதனிடையே, இதுநாள் வரை தனது காதலர் யார் என்று கூறாமல் இருந்த இலியானா தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அப்படியும் அவர் யார் என்பதை இலியானா வெளியிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ