இவனாவிடம் கேட்கப்பட்ட 18+ கேள்வி.. மோசமான கேள்விக்கு பதில் அளித்த லவ் டுடே நாயகி..!
Author: Vignesh25 May 2024, 1:13 pm
கேரள பைங்கிளியான இவனா மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகம் ஆனார், மாஸ்டர்ஸ், ராணி பத்மினி, அனுராகா கரிக்கின் வெல்லம் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அலீனா ஷாஜி என்ற இவரது இயற்பெயரை இவனா என மாற்றிக்கொண்டார்.
தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலே நல்ல பரீட்சியமான நடிகையாக பெயரெடுத்தார். இளம் வயதிலேயே தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: பாடகி சுசித்ரா பேசத் தடை.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!
குறிப்பாக லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்க நடித்து வருகிறார். சமீபத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த கள்வன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு, ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில், பேட்டி ஒன்றில், ஒரு வேலை படவாய்ப்புகளே கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த இவனா, சினிமாவை நம்பி இருக்கவே முடியாது. அது எப்போ சறுக்கும் என தெரியாது. அதனால் தான் நான் தொடர்ந்து மேற்படிப்புகள் படித்து வருகிறேன். சினிமா வாய்ப்பு இல்லை என்றால் நான் தொழில் செய்வேன். என்னுடைய அப்பா தொழிலதிபராக தான் இருக்கிறார். எனவே அவர் வழியில் நானும் செல்வேன் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்கும் டாப்ஸி.. ரசிகர்களை திணறடிக்கும் வீடியோ வைரல்..!
மேலும், பேசுகையில் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, பதில் அளித்தவர் எனக்கு ஆபாச படங்கள் பார்ப்பதற்கு இப்போது, வரை இண்ட்ரஸ்ட் வந்ததில்லை. தற்போது, நான் நல்ல படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆபாச படங்கள் அந்த பக்கம், நான் இந்த பக்கம், என பதில் கொடுத்துள்ளார்.