“வாந்தி வருது, மயக்கமா இருக்கு..” ஜிம்மில் புலம்பிய ஜாக்லின்..!

Author: kavin kumar
15 August 2022, 6:35 pm

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

உடற்பயிற்சி செய்யும்போது அவர் அங்கேயே மிகவும் கஷ்டமாக இருக்கு, வாந்தி வருது, தலை சுத்துது என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் குபீரென சிரித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

  • Kalpana has crossed the danger stage அபாய கட்டத்தை தாண்டினார் கல்பனா… சுயநினைவு திரும்பியதால் விசாரணையை ஆரம்பித்த போலீஸ்!
  • Close menu