27 வயதில் கோடீஸ்வரி ஆன ஜான்வி கபூர்… மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Author: Vignesh
12 March 2024, 10:41 am

மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

janhvi kapoor-updatenews360

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது. வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நடிகை ஜான்வி கபூரும் ஒருவர்.

janhvi kapoor-updatenews360

இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வரும் அவர் தற்போது தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

janhvi kapoor

தற்போது, கர்ணா படத்திலும் சூர்யாவுடன் இந்தியில் உருவாகும் ஜான்வி கபூர் தான் கதாநாயகி என கூறப்படுகிறது. தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. இளம் வயதில், இருந்து நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் ரூ.58 கோடி வரை சொத்து சேர்ந்து உள்ளாராம். இவருக்கு சொந்தமாக 3BHK வீடு ஒன்று உள்ளது. இதன் விலை ரூ. 39 கோடி என கூறப்பட்டு வருகிறது.

janhvi kapoor-updatenews360

மேலும், கிளாமர் குயின் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ஜான்வி, ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், இன்ஸ்டாவில் 21 மில்லியன் Followers கொண்டுள்ள ஜான்வி, விளம்பர பதிவுகளுக்காக, ரூ.70 லட்சம் முதல ரூ.80 லட்சம் வரை சம்பளம் வாங்குகி உள்ளாராம். ஜான்வி கபூருக்கு சொந்தமாக இரண்டு சொகுசு கார்கள் உள்ளன. மேலும், பிஎம்டபிள்யூ X5 காரின் விலை ரூ.82 லட்சம். மேலும், Mercedes-Benz GLE காரின் விலை ரூ.67 லட்சம் என கூறப்படுகிறது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?