பெண்ணின் மனதை தொட்டு படத்துல வரும் நடிகையா இது? முன்ன விட இப்ப தரமா இருக்காங்க!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 2:20 pm

சினிமாவை பொறுத்தவரை அழகு இருந்தாலும், நடிப்பிருந்தாலும் கவர்ச்சியிருந்தால்தான் மதிப்பு. அப்படி கவர்ச்சி காட்ட முடியாது என கூறி சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட எத்தனையோ நடிகைகள் உள்ளனர்.

அழகிருந்து திறமையிருந்தும் கவர்ச்சி காட்ட முடியாததால் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய நடிகையில் ஜெயா சீலும் ஒருவர். ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா‘ என்ற பாடலில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர்.

பெண்ணின் மனதை தொட்டு, சாமுராய் என இரண்டு படங்களில் தரமான கதாபாத்திரங்களில் நடித்த ஜெயா சீல் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். கவர்ச்சி காட்டாமல் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும், பெங்காளி, இந்தி படங்களில் அவ்வப்போது வந்த தலைகாட்டி சென்றவர் குடும்பத்தில் செட்டிலாகிவிட்டார்.

விளம்பரத்தில் நடித்து வரும் ஜெயாசீல், தற்போது தனது மகனுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கட்டுக்குலையாம இன்னும் அப்படியே தரமா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!