15 நாள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்… இத்தனை பேர் வருவாங்க – இயக்குனர் சொன்னதை கேட்டு அதிர்ந்துபோன பிரபல நடிகை!

Author: Shree
2 September 2023, 3:56 pm

நடிகை ஜீவிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகை ஜீவிதா 2018 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சன் டிவியில் வரும் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், “தான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட சமயத்தில், ஒருவர் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறி அந்த படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று ஆசையை வளர்த்து விட்டாராம்”.

பின்னர், “சில மணி நேரம் கழித்து நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அட்ஜஸ்மென்ட் 15 நாட்கள் நடக்கும். முதலில் இயக்குநர் அறைக்குள் வருவார். அதற்கு அடுத்து தயாரிப்பாளர் பின்னர் கேமராமேன், கடைசியாக ஹீரோ என அடுத்தடுத்த நாட்கள் ஒவ்வொருத்தரா வருவார்கள் என சொன்னார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துப்போன ஜீவிதா அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி