உயிரினங்களுக்காக பரிந்து பேசிய பிரபல நடிகை… கிடைத்ததோ 2 லட்சம் அபராதத் தொகை..!

Author: Rajesh
29 January 2022, 1:38 pm

இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறது. இதனிடையே, 5ஜி தொழில்நுட்பத்தால் தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். இதன் மூலம் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து, நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, இது முற்றிலும் தவறான தகவல். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறிஇ ஜுஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த 5ஜி தொழில்நுட்பம் சாதாரண செயல் அல்ல, மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது என்பதை நினைவுப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. பின்னர், ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபாய் அபராதத் தொகையை இரண்டு லட்சமாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…