48 வயதிலும் சிக்குனு ஃபிட்டான உடல்.. ஜோதிகாவின் சீக்ரெட் இது தான்..!

Author: Vignesh
25 July 2024, 5:36 pm

36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தற்போது, படு பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தியும் வருகிறார்.

முன்னதாக ஜோதிகா பிட்னஸ் இல் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அடிக்கடி ஜிம் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஜோதிகா பின்பற்றும் டயட் பிளான் குறித்த தகவல் தற்போது, இணையதளத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, குறைந்த கலோரி பழங்கள் காய்கறிகளை அவர் உட்கொள்வதாக சொல்லப்படுகிறது. மேலும், வீட்டில் சமைத்த தென் இந்திய உணவுகளையே எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!